ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் முதலாம் நாள் இரவு பூசை நிகழ்வுகள்

posted Jun 15, 2015, 9:29 PM by Veeramunai Com   [ updated Jun 15, 2015, 9:30 PM ]
அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று (15.06.2015) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் முதலாம் நாளான நேற்று இரவு வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் சமய சொற்பொழிவு மற்றும் சிவஸ்ரீ. நா.கிருஷ்ணமோகன் குருக்கள் அவர்களின் சொற்பொழிவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா சிறப்பாக இடம்பெற்றது.