ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ வேட்டைத்திருவிழா மற்றும் சப்பரத்திருவிழா

posted Jul 2, 2014, 8:03 PM by Veeramunai Com   [ updated Jul 3, 2014, 10:39 AM ]
அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 8ஆம் நாளாகிய நேற்று (02/07/2014) புதன்கிழமை பகல் வழமைபோன்று கொடித்தம்ப பூசை, வசந்தமண்டப பூசைகள், சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உள் வீதி, வெளி வீதி திரு உலா வருத்தல் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பி.ப 4.30 மணிக்கு வேட்டைத்திருவிழாவும் 8.30 மணிக்கு சப்பரத் திருவிழாவும் இடம்பெற்றது. மேலும் நாளை (03/06/2014) மு.ப 9.00 மணிக்கு பாற்குட பவனியும் பி.ப 4.30 மணிக்கு சித்திரதேரோட்டமும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுகள் எமது இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.