வீரமுனை விநாயகர் விளையாட்டுக்கழகம் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நடாத்திய மாபெரும் விளையாட்டுப்போட்டி நேற்று (06.05.2013) பி.ப 2.30 மணியளவில் விநாயகர் விளையாட்டுக்கழக புதிய மைதானத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றியர் அட்மிரல் சரத் வீரசேகரா அவர்களும் கௌரவ அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திரு.s.புஸ்பராசா மற்றும் விஷேட அதிதியாக பிரதேச செயலாளர் A.மன்சூர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் S.சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட இம்மைதானத்தை ரியர் அட்மிரல் சரத் வீரசேகரா அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது. இவ்விளையாட்டுப்போட்டியில் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு முன்னாள் விநாயகர் விளையாட்டுக்கழக நிருவாகத்தினர்களை கௌரவித்து நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டது. |
நிகழ்வுகள் >