திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் கொடியேற்றம்

posted Jul 23, 2010, 5:49 AM by Ponnampalam Thusanth   [ updated Jul 23, 2010, 5:58 AM by Sathiyaraj Thambiaiyah ]
ஈழத்தின் திருச்செந்தூர் என அழைக்கப்படுவதும் இந்துமதத்தின் புராண வரலாற்றில் முருகன் ஆலயங்களுள் ஒன்றாகவும் திகழும் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்தஉற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அக்கரைப்பற்றில் இருந்து தெற்கு திசையில் 8மைல் தொலைவில் திருக்கோவில் என்னும் பதியில் அமைந்துள்ளது சித்திரவேலாயுதசுவாமி ஆலயம்.குந்தபுராண கதையில் கூறப்படும் முரகப்பெருமான் சூரனை நோக்கி வீசியவேல் வாகுர மலையை பிளந்து சென்று திருக்கோவில் பகுதியில் தங்கியதாகவும் அவையே சித்திரவேலாயுத சுவாமி ஆலயமாக தோற்றம்பெற்றதாக வரலாறு கூறுகின்றன.இவ்வாறு வரலாற்று பெருமை பொருந்திய மேற்படி ஆலயத்தின் கொடியேற்றம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.விசேட யாக பூசை மற்றும் விசேட அபிசேக பூசையுடன் கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் இடம்பெற்றன.அத்துடன் வேத பராயணங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா ஓசையுடன் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து தம்பத்துக்கு விசேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்றன.எதிர்வரும் 9ஆம் திகதி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் தீர்த்த உற்சவம் இடம்பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.தகவல்: வாலசிங்கம் கிருஷ்ணகுமார் (நிருபர்)