வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலும் திருவாதிரை தீர்த்தம் சிறப்பாக நடைபெற்றது. திருவொம்பாவை விரதத்தின் முதல் ஒன்பது நாட்களும் அதிகாலையில் கிராம வீதி வழியாக திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் பாடியதொடு ஆலயத்தில் திருவாசகப் பாடல் ஓதலுடன் சிறப்பு பூசைகள் இடம்பெற்று வந்தது. பத்தாம் நாளாகிய இன்று அதிகாலை நடராஜ பெருமான் அலங்கரிக்கப்பட்ட சப்பிரத்தில் கிராம வீதி வழியாக வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து ஆலய தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. இதில் அதிகளவான பத்தர்கள் கலந்துகொண்டமை சிறப்பு அம்சமாகும். |
நிகழ்வுகள் >