திவி நெகும தேசிய வேலைத்திட்டத்தின் 5ம் கட்ட நிகழ்வு

posted Oct 11, 2013, 10:08 AM by Veeramunai Com   [ updated Oct 11, 2013, 10:09 AM ]
திவிநெகும தேசிய வேலைத்திட்டத்தின் 5ம் கட்ட ஆரம்ப விழா இன்று (11.10.2013) காலை நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  இந்த வேலைத்திட்ட நிகழ்வானது வீரமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் அபிவிருத்தி  உத்தியோகத்தர் M.M.றியால், பிரிவுக்கான  கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் வைபவ ரீதியாக பயிர்கன்றுகள் நட்டு வைக்கபட்டதுடன்  பயிர் விதைகளும் வழங்கப்பட்டது.