இந்துக்களின் மிகவும் சிறப்பு வாய்ந்த உற்சவங்களில் ஒன்றான திருவெண்பாவையின் இறுதி உற்சவமான ஆருத்ரா தீர்த்த உற்சவம் நேற்று (18.12.2013) புதன்கிழமை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் சிறபாக நடைபெற்றது. இதன் போது தீர்த்தக்கேணியில் விசேட அபிஷேகம் நடைபெற்று கும்பம் சொரிதல் நடைபெற்று தீர்த்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. இதனைதொடர்ந்து ஆலயத்தில் திருப்பொன்னுஞ்சல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. |
நிகழ்வுகள் >