மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை விரதம் நோற்கப்படுகின்றது. அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும்.திருவெம்பாவை விரதம் என்பது மார்கழி மாத திருவாதிரை (நட்சத்திரம்) நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும்விரதமாகும். இந்நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து கோயில் சென்று சிவகாமி உடன் இருக்கும் நடராஜரைக் கண்டு அங்கு நடைபெறும் வழிபாட்டில் பங்குபற்றுவர். இவ் விரத காலத்தில் ஒரு நேர உணவாக அவித்த உணவு மட்டுமே உண்பர்.திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடிக்கொண்டும், ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் கோவில்களுக்கு செல்வர். இந்நோன்பைக் கன்னிப் பெண்களே கூடுதலாகக் கடைப்பிடிப்பர். வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலும் திருவாதிரை தீர்த்தம் சிறப்பாக நடைபெற்றது. திருவொம்பாவை விரதத்தின் முதல் ஒன்பது நாட்களும் அதிகாலையில் கிராம வீதி வழியாக திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் பாடியதொடு ஆலயத்தில் திருவாசகப் பாடல் ஓதளுடன் சிறப்பு பூசைகள் இடம்பெற்று வந்தது. பத்தாம் நாளாகிய இன்று அதிகாலை நடராஜ பெருமான் அலங்கரிக்கப்பட்ட சப்பிரத்தில் கிராம வீதி வழியாக வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து ஆலய தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. இதில் அதிகளவான பத்தர்கள் கலந்துகொண்டமை சிறப்பு அம்சமாகும். |
நிகழ்வுகள் >