வீரமுனை அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் வைபவம்

posted Jul 7, 2010, 7:28 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jul 7, 2010, 7:45 AM ]
அம்பாரை மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் வைபவம் கல்முனை இராம கிஷ்ன வித்தியாலயத்தில் நேற்று (06.07.2010) இடம் பெற்றது. இந் நிகழ்வில் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மற்றும் கல்முனை தமிழ்ப்பரிவு பிரதேச செயளாரும் கலந்து கொண்டனர். இதில் 2009, 2010 ஆண்டு இந்து சமய கலசார அமைச்சினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் தோற்றிய அம்பாரை மாவட்ட அனைத்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மேலும் வீரமுனையில் இயங்கி வரும் திருஞான சம்மந்தர் அறநெறிப் பாடசாலை மற்றும் குருசாமி அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் சீருடை பெற்றுக் கொண்டனர்.


            Photos By: Kathiramalai Sathiyaraj