சங்காபிஷேக நேரடி ஒளிபரப்பு

posted Jul 20, 2010, 8:26 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jul 20, 2010, 8:41 AM by Sathiyaraj Thambiaiyah ]
கிழக்கிலங்கையின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றான அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை ஸ்ரீசிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தின் நிறைவு தினமான நாளை புதன்கிழமை மகா சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வுள்ள www.veeramunai.com  என்ற எமது இணையத்தளத்தில்  நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.


1008 சங்குகளினால் இடம்பெறவுள்ள இந்த மகாசங்காபிஷேக நிகழ்வானது நாளை காலை 8.00க்கு இடம்பெறவிருக்கும் புண்ணியா யாகத்துடன் ஆரம்பமாகின்றது.அதனைத்தொடர்ந்து விசேட பூசைகள் இடம்பெற்று முற்பகல் 12.00மணிக்கு மகா சங்காபிஷேகம் இடம்பெறவிருக்கின்றது.இதனையடுத்து விசேட அலங்கார பூசை இடம்பெற்று மதியம் 1.00மணிக்கு மகேசுர பூசை இடம்பெறும்.நாளை மாலை 6.30 தொடக்கம் 8.30 மணியுள்ள சுபவேளையில் வள்ளிதேவசேனா சமேத சிவசுப்ரமணியருக்கு திருக்கல்யாண நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

More Details: http://www.murasam.ch
                      http://www.lankasri.com