வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (08/08/2014) மாலை வரலக்ஷ்மி பூசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன. திருமணமான பெண்கள் கணவர்மார்களின் ஆயுள் வேண்டியும் கன்னிப்பெண்கள் சிறந்த மணவாளனை வேண்டியும் இந்த வரலக்ஷ்மி வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆலயத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடத்தப்பட்டு வரலக்ஷ்மி கொலுவைக்கப்பட்டு அடியார்கள் குத்துவிளக்கு மற்றும் கும்பங்கள் வைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர். ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ நிமலேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர். பூஜையினை தொடர்ந்து அடியார்களுக்கு வரலக்ஷ்மி காப்புக்கட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. |
நிகழ்வுகள் >