அடை மழையால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

posted Dec 18, 2012, 8:42 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Dec 18, 2012, 8:47 AM ]
நாடு முழுவதும் பெய்துவரும் அடை மழை காரணமாக வீரமுனை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக அடை மழை பெய்துவருகின்றது  இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இவ் வெள்ளத்தினால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை - கல்முனை பிரதான வீதி , வீரமுனை - சொறிக்கல்முனை  போன்ற வீதிகளில் வெள்ள நீர் நிரம்பி வளிவதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது அத்துடன் நூற்றுக்கணக்கான வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. 
                      Photos by: Krishanapillai Sutharsan