வெகு சிறப்பாக நடைபெற்ற கார்த்திகை தீப திருநாள்

posted Dec 5, 2014, 6:25 PM by Veeramunai Com   [ updated Dec 5, 2014, 6:25 PM ]
கிருதயுகத்தில் ஒரு கார்த்திகை மாத பௌர்ணமி நாளில், முக்கண்ணன், தன் முறுவலாலேயே முப்புரங்களையும் எரித்து திரிபுரதகனம் நடத்தினார். திரிபுரதகனத்தின் போது, சிவனின் சிரிப்பொலி உலகெங்கும் பரவி, ஜோதியாகப் பிரகாசித்து உலகையே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தியது. தீய சக்திகளுக்கு அக்னி பிழம்பாகவும், உலகிற்கு வெளிச்சமாகவும் விளங்கிய சிவனின் அந்த பிரகாசத்தினை வழிபடும் விதத்தில் தான் கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகின்றது.

கார்த்திகை  தீப திருநானாளான இன்று (05/12/2014) அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட அபிசேகம் மற்றும் பூஜைகள் இடம்பெற்றதுடன் சொக்கப்பானையும் எரிக்கப்பட்டது. இந்து ஆலயங்கள் உட்பட இந்துக்களின் இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றி வழிபாடுகள் இடம்பெற்றன.