அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய விநாயகர் சஷ்டி விரத இறுதி நாள் நிகழ்வு

posted Dec 9, 2013, 10:58 PM by Veeramunai Com   [ updated Dec 9, 2013, 10:58 PM ]
வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் விநாயகர் விரதம் கடந்த 21 நாட்களாக நடைபெற்று  இறுதி நாளான நேற்று (09.12.2013) திங்கட்கிழமை காப்பறுக்கும் வைபவம் மற்றும் கும்பம் தாக்கும் நிகழ்வுகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நிமலேஸ்வரக் குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இதனை தொடர்ந்து விநாயகருக்கு விஷேட பூசைகள் இடம்பெற்றதுடன் அன்னதான நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இவ் ஆலயத்தில் இம்முறை 450 இற்கும் அதிகமான பக்தர்கள் விரதம் நோற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.