வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று (12.12.2010) விநாயகர் சஷ்டி தீர்த்தோற்சவமும் அன்னதான நிகழ்வும் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இவ்விரதத்தினை சுமார் 500க்கும் அதிகமான பக்தர்கள் இவ்வாலயத்தில் அனுஷ்டித்தனர். மேலும் எமது பிரதேசத்தைப் பொறுத்தவரையில் இவ்வாலயத்திலேயே அதிகளவிலான பக்தர்கள் விரதங்களை அனுஷ்டித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. விரதகாலத்தின்போது அலங்கரிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் கருவறையில் உள்ள மூல மூர்த்தி. |
நிகழ்வுகள் >