ஆவணி மாத சுக்கில பட்சத்தில் வரும் சதுர்த்தி அன்று கொண்டாடப்படுவது விநாயகர் சதுர்த்தி இன்று விநாயகர் சதுர்த்தி நாளாகும். இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விரதம் அனுஷ்டிக்கப்பட்டதுடன் விநாயகப் பெருமானுக்கு பாலாபிஷேகம், விசேட பூசைகளும் நடைபெற்றன. வீரமுனை வழிபாட்டு பிள்ளையார் ஆலயத்திலிருந்து அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாற்குடம் எடுத்து வரப்பட்டு விநாயகருக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது. |
நிகழ்வுகள் >