விநாயகர் விளையாட்டுக் கழக அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி

posted Sep 1, 2014, 6:08 AM by Veeramunai Com   [ updated Sep 4, 2014, 7:14 PM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் வருடம் தோறும் நடாத்தப்படும் கிரிக்கட் சுற்றுப்போட்டியின் 2014 ஆம் ஆண்டிற்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (29.08.2014) கழக மைதானத்தில் ஆரம்பமானது. காயத்திரி, யங் ஸ்டார், அசத்தல், விஷ்ணு, எவரெஸ்ட் என ஐந்து அணிகள் பங்கு பற்றிய சுற்றுப்போட்டியில் இறுதிச் சுற்றுப்போட்டிக்கு காயத்திரி, யங் ஸ்டார் அணிகள் தெரிவாகின. இன்று (01.09.2014) இடம்பெற்ற இறுதிச் சுற்றுப்போட்டியில் காயத்திரி அணியினர் வெற்றி பெற்றனர். இதில் தொடரின் ஆட்ட நாயகனாக துருசாந்த் மற்றும் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஜதீஸ் ஆகியோர் தெரிவாகினர். வெற்றி பெற்ற காயத்திரி அணியினருக்கு எமது இணையத்தளம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இறுதிச் சுற்றுப்போட்டிக்கு தெரிவான காயத்திரி அணியினர் 

இறுதிச் சுற்றுப்போட்டிக்கு தெரிவான யங் ஸ்டார் அணியினர்