விநாயகர் விரத இறுதி நாள் நிகழ்வுகள்

posted Dec 21, 2012, 7:15 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Dec 21, 2012, 8:07 PM ]
விநாயக சட்டி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும்.இதை பெருங்கதை விரதம்,பிள்ளையார் கதை  விரதம்  எனவும் அழைப்பர்.


இந்த இருபத்தொரு நாட்களிலும் விநாயகருக்குத் திருமஞ்சன முதலியவைகளைச் சிறந்த முறையில் செய்வித்து ஒவ்வொரு நாளைக்கு  ஒவ்வொரு  விதமாக  இருபத்தொரு  வகையான  பணியாரங்களை  நிவேதித்தல்  வேண்டும். முதல்  இருபது  நாட்களிலும் ஒருபோது உண்டு,  பிள்ளையார்  கதையைப்  பெரியோர்கள்  சொல்லக் கேட்டுக்கொண்டு எப்போதும் தியானத்தில் இருப்பவர்களாக நாட்களைக் கழித்தல் வேண்டும்.இறுதிநாள் மட்டும்உண வை விடுத்து மறுநாட்களையில் பாரணை செய்து விரதத்தை  முடித்துக் கொள்ளுதல் மரவு.


வீரமுனை ஸ்ரீ  சிந்தாயாத்திரைப்  பிள்ளையார்  ஆலயத்திலும்  விநாயர்  விரத  சிறப்பு கதை  பாடல், பூசை  என்பன  இடம்பெற்று 19.12.2012 அன்று  கலை  தீர்த்த  உற்சவத்துடன்  நிறைவு  பெற்றது.