பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமம் கிராமமாக – வீடு வீடாக என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள வீரமுனை 1-4 வரையான கிராமசேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை இன்று (15-03-2014) சனிக்கிழமை வீரமுனை இராமகிருஷ்ண மிஷன் பாடசாலையில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளரும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் உட்பட பெருந்தொகையான பொது மக்கள் கலந்த கொண்டனர். |
நிகழ்வுகள் >