வீரமுனை விநாயகர் விளையாட்டுக்கழகம் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடாத்திய மாபெரும் விளையாட்டு நிகழ்வுக்காக வருகைதந்த தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளர் சுகத் ஜெயசிங்க மற்றும் கிழக்கு மாகாண சபை உறுபப்பினர் கௌரவ H.M வீரசிங்க (ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு) அவர்களினால் வீரமுனை இந்து மயானத்தை புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பி.ப 2.00 மணியளவில் இடம்பெற்றது. கௌரவ அமைச்சர் சரத் வீரசேகரா (தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர்) அவர்கள் இவ் மயானத்தை புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்தமையை தொடர்ந்தே இவ் அடிக்கல் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. |
நிகழ்வுகள் >