வீரமுனை பகவான் ஸ்ரீ சத்யா சாயி சேவா நிலையத்தின் 21ஆவது ஆண்டு நிறைவு விழா

posted Mar 16, 2015, 2:14 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Mar 16, 2015, 2:16 AM ]
வீரமுனை பகவான் ஸ்ரீ சத்யா சாயி சேவா நிலையத்தின் 21ஆவது ஆண்டு நிறைவு விழா 2015.03.15 ஆம் திகதி தலைவர் ஸ்ரீ.எஸ்.திருச்செல்வம் தலைமையில் நிலைய மண்டபத்தில் காலை 5.00 மணிக்கு ஆரம்பமானது. இதில் காலை 5.00 மணிக்கு ஓங்காரம் சுப்ரபாதம், நகரசங்கீர்த்தனத்துடன் காலை 9.00 மணிக்கு 3 முறை ஓங்காரத்துடன் கிழக்குப் பிராந்திய இணைப்புக்குழு தலைவர் கே.லோகிதகுமார் அவர்களால் பிரசாந்திக்கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிகழ்வில் அஸ்டோத்திரம், பஜனை, மங்கள விளக்கேற்றல் உடன் நிலையத் தலைவர் அவர்களால் தலைமையுரையும் செயலாளர் அவர்களால் ஆண்டறிக்கையும் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து வாழ்த்துரைகள் வழங்கப்பட்டன. வாழ்த்துரை வரிசையில் ஸ்ரீமதி.ஆர்.ஜெகநாதன் (பாலவிகாஸ் இணைப்பாளர் கிழக்கு பிராந்திய இணைப்புக்குழு) ஸ்ரீ.ஜி.விநாயகமூர்த்தி (உபதலைவர் கிழக்கு பிராந்திய இணைப்புக்குழு) இவர்களால் வாழ்த்துரையும், சிறப்புரை வழங்கல் வரிசையில் ஸ்ரீ.இரா.தெய்வராஜன் (முன்னாள் தலைவர் அமஞ்சகரை சாயி சேவா நிலையம் – சென்னை) ஸ்ரீ.கே.லோகிதகுமார் (தலைவர் கிழக்குப் பிராந்திய இணைப்புக்குழு), ஸ்ரீ.என்.புவனேந்திரன் (இலங்கை சத்ய சாயி மத்ய அறக்கட்டளை உறுப்பினர்) இவர்களால் சிறப்புரையும் வழங்கப்பட்டு பி.ப 01.30 மணிக்கு நிகழ்வுகள் நிறைவுபெற்று நாராயண சேவையும் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு கிழக்கு பிராந்தியத்தில் உள்ள 22 சாயி நிலையங்களிலிருந்தும் 250 இற்கு மேற்பட்ட சாயி பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.