வீரமுனை R.K.M மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு

posted May 9, 2015, 7:28 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated May 9, 2015, 7:31 PM ]
சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு நேற்று (09/05/2015) பாடசாலை அபிவிருத்திக்குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்க தலைவர் S.மகேஸ்வரன், பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் S.இளங்கோவன், பாடசாலை அதிபர் P.ரசிகரன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், சங்க உறுப்பினர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.
 

Comments