சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் மாணவர் மன்ற நிகழ்வு இன்று (15/05/2015) பாடசாலை அதிபர் ப.ரசிகரன் தலைமையில் ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இறை வணக்கத்துடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் முதல் அங்கமாக வரவேற்பு நடனம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அதிபர் உரை, குழுப்பாடல், தனிப்பாடல், வில்லுப்பாட்டு, மான்நடனம், இசையும் அசையும் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. |
நிகழ்வுகள் >