வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ சுமங்கலி பூசை மற்றும் தெற்ப்பத் திருவிழா

posted Jul 1, 2014, 7:35 PM by Veeramunai Com   [ updated Jul 3, 2014, 10:38 AM ]
அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 7ஆம் நாளாகிய நேற்று (01/07/2014) செவ்வாய்க்கிழமை பகல் வழமைபோன்று கொடித்தம்ப பூசை, வசந்தமண்டப பூசைகள், சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உள் வீதி, வெளி வீதி திரு உலா வருத்தல் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பி.ப 5.30 மணிக்கு சுமங்கலி பூசையும் மாலை 8.30 மணிக்கு தீர்த்தக்கேணியில் தெர்ப்பத்திருவிழாவும் இடம்பெற்றது. மேலும் இன்று (02/06/2014) பி.ப 4.00 மணிக்கு வேட்டைத் திருவிழாவும் பி.ப 8.00 மணிக்கு சோடனை செய்யப்பட்ட முத்துச் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கிராம வீதிகளில் வலம்வந்து அடியார்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.