வீரமுனை விநாயகர் விளையாட்டுக்கழகம்; சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடாத்திய மாபெரும் விளையாட்டு விழா 18.04.2014 அன்று பி.ப 2.00 மணியளவில் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தமிழர் கலாசாரத்தையும் பாரம்பரியத்தினையும் பிரதிபலிக்கதக்கவையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன. இந் நிகழ்வுக்கு பிரதம அதியாக கௌரவ திரு.றியர் அட்மிரல் சரத் வீரசேகரா பங்கு பற்றுவதாக இருந்த போதிலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவரது பிரத்தியேகச் செயலாளர் சுகத் ஜெயசிங்க மற்றும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுபப்பினர் கௌரவ H.M.வீரசிங்க (ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ) முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பின்ர், கௌரவ திரு.S.புஸ்பராசா மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் A.M.அப்துல் லத்தீப் ஆகியோர் கலந்து கொண்டனர். விஷேட அதிதிகளாக இறக்காம பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் கலில் ரகுமான் மற்றும் ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பிரதம குரு கு.நிமலேஸ்வரக் குருக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இவ்விளையாட்டு நிகழ்வின் முதலாவது அங்கமாக மரதன் ஓட்டப் போட்டியை சம்மாந்துறை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி யுரு பத்மசிறியினால் காலை 7.00 மணியளவில் வீரமுனை விநாயக் விளையாட்டுக் கழக மைதான நுழைவாயிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டு மல்வத்தை வரை சென்று மீண்டும் மைதான நுழைவாயிலை வந்தடைந்தது. இப் போடடியில் 06 பேர் போட்டியின் தூரத்தை முழுமையாக ஓடி முடித்தனர். அதனைத் தொடர்ந்து பி.ப 2.00 மணியளவில் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் அதிதிகளை வரவேற்றல், கொடியேற்றல், மங்கள விளக்கேற்றல் போன்ற நிகழ்வுகளுடன் நிழ்ச்சிகள் யாவும் இனிதே ஆரம்பிக்கப்பட்டது. |
நிகழ்வுகள் >