வீரமுனையை அண்டிய கிராமங்களுக்குள் நுழைந்த 30ற்கும் மேற்பட்ட யானைகள்

posted Sep 10, 2014, 4:30 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Sep 10, 2014, 4:35 AM ]
அம்பாறை, சம்மாந்துறை, வீரமுனை, சொறிக்கல்முனை ஆகிய கிராமங்களை  அண்டிய பகுதிக்கு இன்று காலை 30 க்கும் அதிகமான யானைகள் வந்துள்ளன. இந்த யானைகள் இரவு வேளையில் கிராமங்களுக்குள் பிரவேசித்து விளைநிலங்கள் மற்றும் வீடுகளுக்கு சேதம் விளைவிப்பதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

யானைகளின் அட்டகாசம் தொடர்பில் அதிகாரிகளுக்கு பல தடவைகள் அறிவித்தபோதிலும் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். காட்டு யானைகளின் அட்டகாசத்தால் இரவு வேளையில் விழித்திருந்து வீடுகளையும் விளை நிலங்களையும் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சம்மாந்துறை வீரமுனை மற்றும் சொறிக்கல்முனை கிராம மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.                             Reference: www.newsfirst.lk
Comments