வீரமுனையில் 1990-08-12 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் 24ஆவது ஆண்டு நினைவுதினம்

posted Aug 12, 2014, 10:10 AM by Veeramunai Com   [ updated Sep 5, 2014, 8:46 PM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையில் 1990-08-12ஆம் திகதி படுகொலைசெய்யப்பட்டவர்களின் 24ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று அமைதியான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது. 1990ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின்போது வீரமுனை கிராமத்தினை சூழவுள்ள வளத்தாப்பிட்டி,மல்வத்தை,மல்லிகைதீவு,வீரசோலை,அம்பாறை ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் வீரமுனை இராம கிருஸ்ண மிசன் வித்தியாலயம்,வீரமுனை சிந்தாயாத்திரைபிள்ளையார் ஆலயம் மற்றும் கண்ணகியம்மன் ஆலயம் என்பனவற்றில் தஞ்சமடைந்திருந்தனர்.
 
1990-08-12ஆம் திகதி இந்த அகதி முகாம்களுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதல்கள் காரணமாக 95க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் காணாமல்போயினர்.
 
இதனை நினைவுகூரும் வகையில் வருடாந்தம் உயிரிழந்தவர்களின் ஆத்மாசாந்திவேண்டி வீரமுனையில் உள்ள ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். இதனை முன்னிட்டு வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் விசேட பூஜை நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. இதில் பெருமளவான உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.