வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் கடந்த தீபாவளியை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிச்சுற்றுப்போட்டி மைதான திருத்த வேலை காரணமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தது. இவ் இறுதிப் போட்டியானது நேற்று (05.09.2014) மைதானத்தில் நடாத்தப்பட்டது. இறுதிச் சுற்றுப்போட்டிக்கு தெரிவாகிய அசத்தல், யங் ஸ்டார் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற போட்டியில் யங் ஸ்டார் அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற யங் ஸ்டார் அணியினருக்கு எமது இணையத்தளம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். |
நிகழ்வுகள் >