கவிதைகள்
காதலோடு...........
நான் காண்பவை எல்லாம் காதல் காணாத உங்களில் காதல் கண்ட உங்கள் பதிவிலே காதல், அன்பு செலுத்துவோர் மீது காதல். அன்பு செலுத்தாதோர் மீதும் காதல்...... இருப்போர் மேலே காதல், இல்லாதோரிடம் அதிக காதல் ஏழையை கண்டால் காதல், எதிரியின் மீதும் காதல், கற்றோரை கண்டால் காதல், கல்லாதோர் மீது இரக்கம் கொள்ளும் காதல் உலக ஞானத்தின் மேலே காதல், மெய்ஞானத்தின் மீதும் காதல் நான் சென்ற இடமெல்லாம் காதல், இன்று முதல் ............ காதலின் மேலும் காதல்……. |
கண்ணே வா காதல் செய்வோம்.
கண்ணே வா காதல் செய்வோம்! நமது கூடலின் உஷ்ண மூச்சில் சீர் கெட்ட சாதிகள் சிதைந்து போகட்டும். அணைப்பின் இறுக்கத்தில் வழியம் வியர்வைகலெல்லாம் அமிலமாகி அகமண முறையெனும் அரக்கனை வென்று வீழ்த்தட்டும். எண்ணில்லா பிள்ளைகள் பிறந்து தவழட்டும் வரும் காலம் நிகழ்காலத்தோடு யுத்தம் தொடங்கட்டும். நின் குழல் சரிவிலும் கோல விழியிலும் என் குலப்பெருமை பட்டுஒழியட்டும். கண்ணே வா காதல் செய்வோம்! உனது வதன வெளிச்சம் வருணங்களின் குரூர விழிகளைக் குருடாக்கட்டும். தீண்டும் ஒவ்வொரு முத்தமும் உயர்வு தாழ்வு என்னும் வலிய சுவர்தனில் இடிகளாய் இறங்கட்டும் . கண்ணே வா காதல் செய்வோம்! சாதியால் சமாதியாக்கப்பட்ட அனேக காதலர்களின் மனசாட்சியாய்..... கண்ணே வா காதல்செய்வோம் ! |
காதல் நெகிழி
இப்படி அழகாய் உதட்டை பிதுக்கி சொல்வாயானால் எத்தனை முறையானாலும் நிராகரிக்கப்பட தயார் என்று நீ சொன்னத் தருணத்தில் உன் காதலின் துளி என்னுள் உதிர்ந்து மனதை நெகிழ்தியது மதுவில் மிதக்கும் பனிக்கட்டியென கரைய துவங்கிவிட்டேன் உன் காதலில் நீ ரசிப்பதற்காகவே என்னை அழகாய் வைத்துக் கொள்கிறேன் நீ பொறாமைப்படவதற்காகவே பிற ஆண்களுடன் பேசுகிறேன் மீண்டும் உன் காதலை நீ சொல்வதற்காகவே உன்னோடான தனிமையான சந்தர்பங்களை உருவாக்குகிறேன் நீ என்னை பார்க்காமல் போன பொழுதுக்காக எல்லாம் உன்னிடம் சண்டையிட காத்திருக்கிறேன் காதல் என்னை மீண்டும் சிறுப்பிள்ளையாக்கிவிட்டது தன் கிறுக்குதனங்களை எல்லாம் என்னை செய்ய வைத்து வேடிக்கைப்பார்க்கிறது புரிந்து கொள்ளடா உன் அண்மையும் தொலைவும் எனக்கு பதட்டமானதாகவே இருக்கிறது... |
ஏனோ அவளுக்கு
எவளின் கண்களில் என் கண்கள் சிக்கிக் கொண்டதோ எவளின் அங்க அசைவுகளில் நான் மூர்சையாகிறேனோ எவள் வனப்பில் என்வாலிபம் மண்டிஇட்டதோ எவளின் திருமுகம் என் இரவுகளை திருடிக்கொள்கிறதோ எவளைக் கண்டால் இதயத்தில் எரிமலை வெடிக்கிறதோ எவளின் திரு உதட்டில் உயிரானது ஒட்டி ஊசலாடுகிறதோ எவளின் அருகாமை ரத்தத்திலே ரயிலோட வைக்கிறதோ எவள் இறந்தால் அண்ட சராசரங்கள் யாவும் பொடியாகிப்போகிடும் எனப்படுகிறதோ அவளுக்கு என்னைப்பற்றி ஏதும் புரிவதில்லை அவள் விழிகளில் தொலைத்த என் எதிர்காலம் போலவே.. |
கண்ணே! எந்தன் கண்மணி!
ஒளிரும் கண்கள் மின்மினி உந்தன் குரலோ கிண்கிணி அருகில் வா! என் பெண்மணி! மாலை சூட தலைகுனி! நீயும் நானும் தனித்தனி இல்லை இனிமேல் எனக்கு நீ! தின்னத் தெவிட்டா முக்கனி! அணியும் ஆடை தாவணி! அறிவில் நீயோ கலைவாணி! அன்புக்கே நீ அடிபணி! ஆணவத்தை எதிர்க்கத் துணி! என்னைப் பிடித்த கிரகம் சனி! என்னை விட்டு விலகும் இனி! உந்தன்முன் நான் உருகும்பனி! உன்னைக் காப்பதே என்பணி! |
காதல் கடிதம்
![]() கண்கள் என்னும் பேனாவால் கண்ணீர் என்னும் மை கொண்டு எதுகிறேன் ஒரு கடிதம் அதை நீ படிப்பதற்காய்.... ஓ................ஓ...................... மறந்தே விட்டேன்............ இப்போது நீ என்னோடு இல்லை என்று................. இல்லாததால் தானே-நான் இப்படி ஒரு கவிதையை எழுதுகிறேன்.......................... முன்பெல்லாம் எனை கவிஞன் என்பார் பலர் இப்போது என் பெயர்கள் என்ன தெரியுமா? பித்தன்,தேவதாசன் இரண்டுமே உன்னால் மட்டுமே நான் பெற்ருக்கொண்டவை பெண்னே................... காதல் எனும் உன் நாடகத்தை அரங்கேற்ரம் செய்ய என் இதயம் என்ன நாடக மேடையா? தயவு செய்து வேண்டுகிறேன் நிறுத்திக் கொள் உன் அரங்கேற்ரத்தை அல்ல நாடகத்தையே. |
ஒரே ஒரு எழுத்துப்பிழை
ஒரே ஒரு எழுத்துப்பிழை என் காதலை புரட்டி போட்டது அந்த அழகுப் பெண் அதை உண்மை என்று என்னை விட்டுப் போனாள் என் வாழ்க்கையில் மன்னிக்க மாட்டேன் அந்த ஒரு தருணத்தை வெகுநாள் கழித்து இன்று அவளை பார்த்தேன் நான் அன்று சொல்லிய வார்த்தை நிஜம் தானோ !!! அது என்ன வார்த்தை கேளுங்கள் அந்த கொடுமையை அன்பே உன் அழகு முகம் மந்தியை போல இருக்கிறது என்னை பார்த்து ஒரு முறை சிரி அதுவே நம் காதலின் திறவுகோல் . மதி மந்தியாக மறுத்தாள் மறந்தாள் அந்த மாது பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் முடிந்தது ![]() ![]() ![]() ம்ம் ... ஒரே ஒரு எழுத்துப்பிழை என் காதலை புரட்டி போட்டது வாழ்க்கையில் என்னை குனிய வைத்து கும்மி அடித்தது இந்த குரங்கு __________________ |
பிரிந்த என் காதலி
இருட்டான வயதில் வெளிச்சமாய் வந்து சென்றவளே! உன் பூவிரல் பிடித்து எழுந்து நின்றவன் எழுதும் கடிதம்..... உன்னை முதல் முறையாக உன் வீட்டு முற்றத்தில் மூங்கில் நாற்காலியில் பூத்த தாமரைப்பூவாக பார்த்தேன் பார்த்த நொடியிலேயே நீதான் எனக்கு எல்லாமென என்னை கொடுத்தேன் ![]() உன் முகதரிசனம் பெரும் மாலை வேளைக்காக நாள் முழுவதும் கடிகாரத்தின் அடியில் தவம் கிடந்திருக்கிறேன் நொடிமுள் ஓசையை என் இதயத்துடிப்பு வென்றிருக்கிறது உன் வீட்டுச் சுவரும் என் வீட்டுச் சுவரும் ஒன்றுதான் என்றாலும் அச்சுவரின் இடைவெளியை ஆகாய இடைவெளியாய் எண்ணி எண்ணி இதயம் கனத்திருக்கிறேன் உன் சந்திர வதனத்தையும் சங்கு கழுத்தையும் தொடுகின்ற ஆபரணத்தை ஏக்கமாய் பார்த்திருக்கிறேன் உன் இடையை சுற்றி தவழும் புடவையின் சின்ன நூலாக மாற தவமிருந்திருக்கிறேன் நீ மார்போடு அணைக்கும் புத்தகமாய் நானிருக்க கூடாதா என அழுதிருக்கிறேன் வெட்கத்தை விட்டு சொல்கிறேன் உனது பூம்பாதம் தாங்குகின்ற செருப்பாக பிறந்திருக்க கூடாதா என என்னையே நான் நொந்திருக்கிறேன் உன் கால்களை தழுவும் கொலுசுகளின் மீது பொறாமைப் பட்டிருக்கிறேன் உன் கொலுசுகளிலிருந்து எழும்புகின்ற கிணுகிணு ஓசை என் செவிகளை தீண்டும் போது ஆத்மா சிலிர்ப்படைய மெய்மறந்திருக்கிறேன் உன் விரல் நுனித் தீண்டிய புத்தகப் பக்கங்களை வருடி கனவுகளில் மிதந்திருக்கிறேன் நீ முதல் முதலாக என்னிடம் பேசியது ஊரில் இருந்து எப்போது வந்தாய் என்ற நான்கு வார்த்தைகள் அந்த நான்கு வார்த்தைகள்தான் எனது நான்கு வேதங்கள் உன் குரலைக் கேட்டதும் அப்போதுதான் என் காதுகள் திறந்ததும் அப்போதுதான் இந்த வார்த்தையை உன்னிடமிருந்து கேட்பதற்காகவே ஜனனம் எடுத்திருப்பதை உணர்ந்தேன் என் பிறவியின் பயன் கிடைத்து விட்டதாக மகிழ்ந்தேன் நீனாக வந்து என்னிடம் பேசியது மலரே வந்து வண்டிடம் கைகுலுக்கிக் கொண்டது போலிருந்தது நீ வந்து பேசிய அந்த நாளில் எனது வானில் ஆயிரம் நிலவுகள் அணிவகுப்பு நடத்தின என் தோட்டமெங்கும் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன என் மனதிற்குள் மட்டும் மழை மேகம் சூழ்ந்து மத்தளம் கொட்டியது |
காதல்..!
மனச் சந்திப்பில் உணர்வுகளின் எழுச்சியில் உதிப்பது. சோகத்திற்கும் சுகானுபவத்திற்கும் தனித்துவமாகிப்போன துடிப்பு அது. மௌனங்களின் மொழி பெயர்ப்பில் இசையும் கவிதை.., காதல்... நிசப்தத்தில் உறைந்துபோகும் இரவுகளில்.., இருதயத்தின் ஒரு ஓரத்தில் எட்டிப்பார்க்கும் நிலா... அது... பார்வையில் ஒரு வீச்சு சலனத்தில் ஒரு துளி மௌனத்தில் ஒரு பேச்சு இதயத்தில் ஒரு வலி இவை தொடர்ந்த ஒரு ஏகாந்தம் காதல்... மொத்தத்தில், சத்தமில்லாமல் சரித்திரம் படைக்கும் உயிர்க் காவியம் காதலே..! ***** காதலின் பிரசவம் சிரிப்பினில் புரிவதில்லை. அது கண்ணீர்த் துளிகளிலேதான் பிரசன்னமாகும். ***** நீ காதலித்திருந்தால் உனது இதயத்துடிப்பின் ஒலி உனது காதுவரை எதிரொலிக்கும்... அப்பொழுது, உனக்குள் சந்தோஷம்மட்டுமே நர்த்தனமாடும்... ஏனென்றால், உனது இதயம் காதலுக்கு மட்டுமே அர்ப்பணமாயிருக்கும்... உனது காதல் கல்லறைக்குள் அடங்கிப்போனால் உனது உயிர்த்துடிப்பின் வலி நீ உள்ளளவும் உன்னை வெறுக்கவைக்கும்... ஏனெனில், உனது உயிர் காதலில் மட்டுமே உறைந்திருக்கும். அப்பொழுது, உனது நினைவுகளுக்குள் காதல் மட்டுமே சமர்ப்பணமாயிருக்கும்... ***** என் உயிரோடு வாசம் செய்பவளே உன் இதழோர மௌனம் என்னைக் கொல்லுதடி... தளிர் நிலவாக என்னுள்ளே மலர்ந்தவளே விழி நீர் கூடத் துளிர்க்க மறுக்கிறதே... ***** வஞ்சியே! உன்னை என் இதயத் துடிப்பில் வைத்துத் தாலாட்டுவேன்.., அது துடிக்கும்வரையிலும்... உன் நினைவுகளை அதன் மிருதுவான தாளத்தில் உறங்கவைப்பேன்.., அது அதிரும்வரையிலும்... ***** எனது கண்கள் இமைப்பதைக் கூட நான் அனுமதிப்பதில்லை... அவை உனது விம்பத்தைக் கணப்பொழுது என்னிடம் பிரிப்பதனால்... ***** அழகே! நீ என்னுள் கலந்த நாள் முதலாய் நான் நானாகவில்லை... நீயாகவே நான் மாறிவிட்டேன்... __________________ |
கணினி காதலன்
சொல்லி விட வேண்டும் என்கிற ஆவல் அடிகடி வருவதுண்டு... கணினி முன் விரியும் கண்கள்-எப்போதும் கவிதை பக்கமோ..காதலி பக்கமோ அதிகமாக திரும்பியதில்லை.. இள மயில் அவள் அழகை வரிகளில் விவரிக்க.. MS -WORD போதவில்லை... வட்டமிட்டு வரும் அவள் பார்வையை கட்டம் கட்டி விவரிக்க..அவளொன்றும் MS -EXCEL இல்லை.. தினசரி மாறும் அழகு பரிமாணங்களை திறனாய் காட்ட 3DS MAX தினறியதென்னவோ உண்மைதான்.. வாழும் நாளின் வசந்தமாய் நான் கருதும் அவள் பெயரை வரைந்து பார்க்க CORELDRAW -விற்கு கொடுத்துவைக்க வில்லை.. தனிமையில் அவள் நினைவுகளோடு நீளும் நிமிடங்களை தரவிறக்கம் செய்ய CHROME -களும் கூட மறுத்துவிட்டன.. எண்ணங்களில் தவறில்லை வரைந்த வண்ணங்களில் தவறில்லை.. அவளை வரைய முற்பட்டு என் PHOTOSHOP -ம் பொறுமை இழந்து விட்டது... அவள் உள்ளம் என்னவென்று எடுத்துக் காட்ட என்னால் இயலவில்லை.. இது என் ILLUSTRATOR -ன் இயலாமை.. என் கணினி கொண்டது INTEL PENTIUM நான் காதல் கொண்டது இந்த பெண்ணிடம்...அவள் மேன்மையை சொல்ல வரும் எனக்கு மென்பொருள் ஏதும் உதவுமா.. கடைசியாக.... F1 அழுத்தி ஏனென்று கேட்டால்.. ERROR என்று எரிந்து விழுகிறது என் கணினி CORREPT ஆன என் இதயம். இன்னும் ஒரு CTRL +Z -ஐ தேடி அலைகிறது... |
1-10 of 45