குடும்பஸ்தன்!

posted Dec 3, 2011, 12:35 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Dec 3, 2011, 8:05 AM ]

என்ன கொடுப்பேன்
எதைக் கொடுப்பேன்
என்று எண்ணுமுன்னே
உன்னைக் குடு....
உன் சுதந்திரம் குடு....
இன்னும் என்ன மிச்சமிருக்கோ
அதெல்லாம் குடு...
பர்சைக் குடு
பீரோ சாவியைக் குடு...
சேலை வாங்கிக் குடு...
சங்கிலி வாங்கிக் குடு...
கால் கொலுசு வாங்கிக் குடு..
குடு..
குடு...
என்று
"குடு"ம்பஸ்தன்
ஆக்கி விட்டார்கள்.