என் இதயமே

posted Nov 23, 2011, 6:25 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Nov 23, 2011, 6:26 AM ]
எனக்காக இதயம்
உனக்குள் துடிக்க
தனியாக துடிக்க
இன்னொரு இதயமோ.??


உனக்குள் இருக்கவே
என் மனம் ஏங்க
வேண்டாம் இதயம் என்னுள்...

உன் இதயத்தின் வேலையை
இருமடங்காக்கி விட்டேன்
எனக்கு சேர்த்து துடிக்கும்
நம் இதயத்திற்கு
என் முத்தத்தை சத்தமாக்கி
விடவா?

எனக்காக நீ அங்கே துடிக்க
உனக்காக இங்கே
உயிர் வாழ்கிறேன்
உன்னை நினைத்து...

உன் இதயத்துடிப்பின்
ஓவ்வொருத் துடிப்பிலும்
என் காதல் உயிர் வாழ
காதலோடு காத்திருக்கிறேன்
உன்னோடு வாழ...

ஒரு நாள் ஏனும் உன்னோடு
உனக்காக உன்னவளாய்
உன் மடியில் உறங்கிடும்
வரத்தை தந்து விடு ..

உன் கரங்கள் எழுதும்
கவிதையாய் என்னை மாற்றிவிடு
உனக்குள் நான் இருப்பதை போல
எனக்குள் நீ வந்துவிடு..

வாழ்நாள் முழுதும்
உன்னோடு தொடர துடிக்கிறேன்
வாழும் காலம் வரை
உன்னையே நினைக்கிறேன்..

என் இதயமே
மௌனமொழி பேசி
என்னை வதைத்து விடாதே..
எல்லாவற்றையும்
தாங்கிக்கொள்ள
தற்போது என் இதயம்
என் வசம் இல்லை....