படிக்க மட்டுமே நாம்..!
எதை எதையோ
எவன் எவனோ
எதில் எதிலோ
எழுதி வைத்திருக்க..
படிக்க மட்டுமே
நாம்...! உலர்ந்த சிறகு
உடைந்த மனம்
உலராத காதல்
உவப்பாத உணவு
உயராத வாழ்க்கை
உள்ளுக்குள் எல்லாமே
ஒன்றுதான்..! துள்ளும்வரையிலும் துள்ளு..!
துள்ளி எழுந்ததாம்
காதல்..!
துள்ளிச் சென்றதாம்
காலம்..!
துள்ளச் சொன்னதாம்
மனம்..!
துள்ளாமல் துள்ளியதாம்
இளமை..!
தள்ளாமை வரும்வரையில்
துள்ளு..!
அமைதி காற்றே அமைதி..!
எங்கும் நிசப்தம்
எதிலும் நிசப்தம்
அமைதி காற்றே
அமைதி..!
சில நிமிடங்கள்
அமைதி காற்றே..!
கொஞ்சம் பனி
வீசட்டும்
சிறிது ஒளி
கிடைக்கட்டும்..
அமைதி காற்றே
அமைதி..!
சவக்குழி எனக்காக
காத்திருக்கிறது..
நான் மட்டுமே..
எனக்கு மட்டுமே..
சருகுகளுக்கு அங்கே
இடமில்லை.
தனியனாகவே செல்ல
விரும்புகிறேன்..
அமைதி காற்றே
அமைதி..!
இலை, சருகுகளை
என்னுடன் தள்ளாதே..
அவைகளாவது
சூரியனை பார்த்தே
உருவம் இழக்கட்டும்..! |
கவிதைகள் >