சம்சாரம் அது மின்சாரம்

posted Dec 5, 2011, 9:50 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Dec 5, 2011, 9:51 AM ]

சம்சாரம் ஒரு
மின்சாரமாம்

உன் அப்பாவைக் கொண்டு பார்த்தால்
நீ
புனல் மின்சாரம்(தண்ணியிலயே இருக்காரே!)

உன் அம்மாவைக் கொண்டு பார்த்தால்
நீ
அனல் மின்சாரம்(மனுஷி இப்படியா எரிஞ்சு விழறது?)

உன் அக்காவைக் கொண்டு பார்த்தால்
நீ
அணு மின்சாரம்(யப்பா இப்படியா வெடிக்கறது)

உன் அண்ணனைக் கொண்டு பார்த்தால்
நீ
சூரிய மின்சாரம்(நல்லாவே வெயில்ல காயறான், பொண்ணுங்க பின்னாடி சுத்தி)

உன் தம்பியைக் கொண்டு பார்த்தால்
நீ
காற்று மின்சாரம்(நல்லாவே சுத்தறான் ஊரையும் ஊரில் உள்ள பெண்கள் பின்னாடியும்)

எதுவாய் இருந்தால் என்ன
என் வீட்டு விளக்கேற்ற வா
மின்சாரமே நீ என்
சம்சாரமாய்...