ஒருதலை காதல்

posted Oct 17, 2011, 10:21 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 17, 2011, 10:22 AM ]
நான் கவிதையாக வந்தேன்
கவிஞன் பைத்தியம் என்றாய்

நான் மழையாக வந்தேன்
குடை வேண்டும் என்றாய்

நான் குடையாக வந்தேன்
மழை பிடிக்கும் என்றாய்

நான் கண்ணீரோடு வந்தேன்
உப்பு கரிக்கும் என்றாய்

நான் உப்புக்கடலாய் வந்தேன்
சொந்த நிறமில்லாதவன் என்றாய்

நான் வானவில்லாக வந்தேன்
வண்ணங்களை விட கருப்பு தான் அழகு என்றாய்

நான் கூந்தலாய் வந்தேன்
நான் வந்ததும் நரை வந்தது என்றாய்

நான் ரோஜாவாய் வந்தேன்
முள் குத்துகிறது என்றாய்

இப்படி உனக்காக
நான் உருமாறிக்கொண்டே இருக்கிறேன்

ஆனால் நீ மட்டும்
காதலாக உருமாறி வர என் மறுக்கிறாய்???