நிரம்பியிருக்கும் நிசப்தம் நினைவுபடுத்துகிறது.. உன் இருப்பை..!! தேங்கியிருக்கும் அழுக்கு நினைவுபடுத்துகிறது.. உன் தூய்மையை..!! குவிந்திருக்கும் பத்திரிக்கை நினைவுபடுத்துகிறது.. உன் வாசிப்பை..!! சிதறியிருக்கும் உடைகள் நினைவுபடுத்துகிறது.. உன் வனப்பை..!! விரிந்திருக்கும் வானம் நினைவுபடுத்துகிறது.. உன் வண்ணத்தை..!! விழித்திருக்கும் இரவு நினைவுபடுத்துகிறது.. உன் அன்பை..!! |
கவிதைகள் >