நீ, நான், நாம்

posted Nov 20, 2011, 8:29 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Nov 20, 2011, 8:30 AM ]
என்னிலே நீ, எண்ணில்லா நீ, 
என்னிலா நீ?? என் நிலா நீ 

கண்ணிலே நீ, கண்ணுள்ளே நீ, 
கண்ணிலா நீ?? கன்(னி)நிலா நீ 

உன்னிலா நான்?? உன்னுளும் நான், 
உன் உளம் நான், உன் உலா நான் 


உன்னிலும் நான், உன்நிலம் நான், 
உன்னுல(க)ம் நான், என் பெண்ணுளம் நீ 

நான் இன்று நீயானேன் 
நீ என்றும் நானானேன் 
நீ, நான் என்றதும் நாமானது 
இன்பம் நமதானது 
வாழ்க்கை நமக்கானது
__________________