என்னை கொன்றுவிடு என்றாள் அவள் அதிர்ந்தேன் நான் வார்த்தைகளால் பல முறை இறப்பதைவிட இது மேல் என்றாள் நான் கதறினேன் இழந்துவிடுவேனோ என அஞ்சினேன் என்னை மன்னிப்பாயா? உன்னை நான் மன்னித்தேன் ஆனால் நீ உன்னை மன்னிப்பாயா என்றாள் நான் தலை தாழ்ந்தேன் அவள் தலை நிமிர்ந்தாள். என்ன வழி என்றேன் உன்னை நீயே கேள் என்றாள் நான் அழுதேன் புலம்பினேன் விடை கிடைக்கவில்லை யார் தீர்ப்பார் இந்த வேதனையை நான் தீர்ப்பேன் என்றான் மனம் என்னும் நண்பன் எப்படி என்றேன் நான் கோபம் என்னும் அரக்கனால் உருவான வேதனையை அன்பு என்னும் ஆயுதத்தால் கொன்றுவிடு ஆசை என்னும் மருந்து இட்டுவிடு இது போதுமா அவள் கிடைப்பாளா என்றேன் நான் நண்பன் சிரித்தான்! நீரின்றி அமையாது உலகு பொறுமை என்னும் தேர் இன்றி அமையாது நல் வாழ்வு புரிந்தது எனக்கு! தெளிந்தது எண்ணம்! விரைந்தேன் அவளிடம் |
கவிதைகள் >