கணினி காதலன்

posted Jan 7, 2012, 9:05 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jan 7, 2012, 9:05 AM ]
அவள் அழகை கவிதையில் 
சொல்லி விட வேண்டும்
என்கிற ஆவல் அடிகடி 
வருவதுண்டு...

கணினி முன் விரியும் கண்கள்-எப்போதும் 
கவிதை பக்கமோ..காதலி பக்கமோ 
அதிகமாக திரும்பியதில்லை..

இள மயில் அவள் அழகை 
வரிகளில் விவரிக்க..
MS -WORD போதவில்லை...

வட்டமிட்டு வரும் அவள் பார்வையை 
கட்டம் கட்டி விவரிக்க..அவளொன்றும்
MS -EXCEL இல்லை..

தினசரி மாறும் அழகு பரிமாணங்களை
திறனாய் காட்ட 
3DS MAX தினறியதென்னவோ 
உண்மைதான்..

வாழும் நாளின் 
வசந்தமாய் நான் கருதும்
அவள் பெயரை வரைந்து பார்க்க 
CORELDRAW -விற்கு கொடுத்துவைக்க வில்லை..

தனிமையில் அவள் நினைவுகளோடு 
நீளும் நிமிடங்களை 
தரவிறக்கம் செய்ய CHROME -களும் கூட
மறுத்துவிட்டன..

எண்ணங்களில் தவறில்லை 
வரைந்த வண்ணங்களில் தவறில்லை..
அவளை வரைய முற்பட்டு என் 
PHOTOSHOP -ம் பொறுமை இழந்து விட்டது...

அவள் உள்ளம் என்னவென்று 
எடுத்துக் காட்ட என்னால் இயலவில்லை..
இது என் ILLUSTRATOR -ன் இயலாமை..

என் கணினி கொண்டது INTEL PENTIUM
நான் காதல் கொண்டது இந்த பெண்ணிடம்...அவள்
மேன்மையை சொல்ல வரும் எனக்கு 
மென்பொருள் ஏதும் உதவுமா..

கடைசியாக....
F1 அழுத்தி ஏனென்று கேட்டால்..
ERROR என்று எரிந்து விழுகிறது என் கணினி 
CORREPT ஆன என் இதயம். இன்னும் ஒரு
CTRL +Z -ஐ தேடி அலைகிறது...