இடறி விழும் மனது நீ செல்லும் பாதைகளில் எடுத்தாள மறுத்து தாண்டி செல்கிறாய்!!! ![]() புதிதாய் கனவுகள் விரியும் பட்டாம்பூச்சியாய் ரசிக்க மறுத்து ஒடித்து போகிறாய், கனவு சிறகுகளை!! சில்வண்டுகள் ரீங்காரமிடுகிறது சின்ன சின்ன ஆசைகள் உன்னுடையதுதான் என்று சொன்னால் சிரித்து மலுப்பி செல்கிறாய்!!! ஆரவாரமாயும் மனதை அமைதி படுத்தியும் வழி எதுவென்றாவது சொல் இப்படி அலைபாய்ந்து கொண்டிருக்க எனக்கு மட்டும் ஆசையா என்ன???? |
கவிதைகள் >