![]() ஆணை இட்டு வருவதல்ல அடுத்தவர் சுட்டி தெரிவதல்ல சாதி பார்த்தோ சமயம் பார்த்தோ வருவதல்ல ----காதல் ஆர்ப்பரித்து வருகின்ற அலையடித்து செல்லும் சிப்பிகள் அல்ல காலத்தால் அழியா காதலை சுவாசித்து நேசத்தை சிருட்டிக்கும் சிற்பிகள்--- காதலர்கள் தென்றல் எனை தீண்டியதும் இல்லை நான் அதை தாண்டியதும் இல்லை இது ஒரு தலை காதல் கலையில் தேடி மதியம் நாடி மாலையில் கூடி பிரியும் காதல் இது காமுகர் காதல் கடைக்கண் பார்வை நோக்கி காலமெல்லாம் உனதுடன் நான் எனதுடன் நீ என்றொருமித்து கால காலமாய் ஓங்கி நிற்கும் காயம் தனை தங்கி நிற்கும் இது இரு தலை காதல் துயரம் பார்த்து வருவது அனுதாபம் காசு பார்த்து கட்டம் பார்த்து சேர்வது வியாபாரம் மனம் பார்த்து குணம் பார்த்து வரும் காதல் நல் மனம் படைத்த காதல் நறுமணம் படைத்த காதல் நாடித் தளர்ந்த வேளையிலும் நாடி வந்தவளை சந்தித்த, சேர்ந்து பயணித்த வாழ்க்கையை அசை போட்டு ரசிக்க வைக்கும் காதல் காலன் கயிற்றை சுருக்கும் வேளையில் கண்கள் தேடிடும் சேதி சொல்ல அடுத்த பிறப்பிலும் தொடருவோம் உன்னில் நான் என்னில் நீ கலங்காதே கார்முகிலே என்றாருதலாய்... |
கவிதைகள் >