கல்லறையானவன் பேச்சு

posted Dec 13, 2011, 8:55 AM by Sathiyaraj Kathiramalai










உன்னைப்
பார்த்தேன்
உன்னில்
கலந்தேன்
என் காதலை
விண்ணப்பித்தேன்
காதலில்
ஜெயித்தேன்
உன்னோடு
ஐக்கியமானேன்
இரண்டறக்
கலந்தேன்
உன்னாலே
பிரிந்தேன்
உள்ளத்தால்
தவித்தேன்
முடிவற்றுக்
கிடந்தேன்
காதலில்
தோற்றேன்
வலியால் 
துடித்தேன்
மாற்றான் மனைவியாக
கண்டேன்
இரண்டாக
உடைந்தேன்
என் காதலுக்கு
விடை தேடினேன்
எனக்கு முடிவுரை
எழுதினேன்
என்னை
அழித்தேன்
இறுதியில்
கல்லறையானேன்.
Comments