காதலோடு...........

posted Mar 23, 2012, 11:24 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Mar 23, 2012, 11:25 AM ]
நான் சென்ற இடமெல்லாம் காதல்,
நான் காண்பவை எல்லாம் காதல் 
காணாத உங்களில் காதல் 

கண்ட உங்கள் பதிவிலே காதல், 
அன்பு செலுத்துவோர் மீது காதல்.
அன்பு செலுத்தாதோர் மீதும் காதல்......

இருப்போர் மேலே காதல், 
இல்லாதோரிடம் அதிக காதல் 
ஏழையை கண்டால் காதல்,
எதிரியின் மீதும் காதல்,

கற்றோரை கண்டால் காதல்,
கல்லாதோர் மீது இரக்கம் கொள்ளும் காதல் 
உலக ஞானத்தின் மேலே காதல்,
மெய்ஞானத்தின் மீதும் காதல் 
நான் சென்ற இடமெல்லாம் காதல், 

இன்று முதல் ............
காதலின் மேலும் காதல்…….

Comments