பழகிய நாட்கள்

posted Dec 1, 2011, 9:10 AM by Sathiyaraj Kathiramalai
தட்ப வெப்பங்கள் மாறலாம் 
உண்மை நட்புக்கள் மாறுமோ...?
காலம் செல்லத்தான் 
மெல்ல 
மனித உள்ளங்கள் மாறுமே 
அன்பும் கூடவே தானும்
மாறித்தான் போகுமோ..?
சில நொடிகளில் வாழ்ந்தோம் 
பல யுகங்களை கடந்தோம் 
எல்லாம் 
வெறும் விடுகதையாய் ஆச்சு! 

பல வருடங்கள் சென்று 
எம் நிலைதனை நினைத்தோம் 
சிறு கதையாய்ப் போச்சு...
எம் கண்­ரோடிணைந்து 
கால வெள்ளம் 
ஓடுதம்மா...
உன்னோடு பேசிய 
அன்பு வசனத்தை 
நினைத்தேன்...
கண்­ணீராய் பெருகிய 
ஆனந்தம் 
அதில் நனைந்தேன்...
எந்தன் உள்ளத்தில் 
ஓர் உற்சாகம் 
உண்டானதே...
இது என் வாழ்க்கையின் 
பேருற்சவம் 
என்றாகுமே...

காலங்கள் தாண்டிவந்து 
எனை ஈர்த்தாய் 
எண்ணத்தில் தோன்றி 
எனைக் கொன்றாய்...
யாதுமறியாமல் நின்றேனே 
உன் நாமம் 
அதை மட்டும் நவின்றேனே 
யாதுமாகி என்னுள்ளத்தில் 
உறைந்தாயே...
யாது இப்போது செய்ய... 
யாதுமறியாமலே கேட்கிறேன்...!
வான் மழையில் நனைந்தோம் 
விளையாட்டாய், 
காய்ச்சல் வந்து நாமோ 
இணைந்து தும்மினோமே...
கண்களோடு கண்களை 
இரண்டு பேரும் நோக்கி 
கண்­ணீர் வராமல் யார் 
வெல்வதென்று பார்த்தோமே...
காயம் பட்ட உனக்கு 
மருந்து கட்ட எண்ணி, 
என் மனதில் காயம் - 
உன் வார்த்தை பட்டதாலா...?
மாமரத்தில் நாமோ 
ஏறி விளையாட, 
உன் கால் சறுக்கி நீ 
மணல்மேட்டில் விழ - 
என் காலும் ஏன் சறுக்கியதோ...!

நீ தப்பு செய்யாமலே 
உனை அப்பா திட்டியபோது 
என் கண்ணில் நீர் வடிந்ததேனோ...
அதை உன் கண்கள் பார்க்குமுன்பே
என் கைகள் துடைத்ததுமேனோ...!
எம் கண்­ணீரோடிணைந்து 
கால வெள்ளம் 
ஓடுதம்மா...