![]() காலம் மாறியது உன்கோலமும் மாறியது ஆணென்ற ஆணவமில்லை ஆண்டவன் சத்தியம் பேணுவதில் கவணமிருந்தால் நீ வெற்றிபெருவாய் ஆணின்தலை நிமிர நீயே ஆசியர் பெண்ணின் துணையின்றி ஆணில்லை காரணமறிந்தால் காலமறிந்தால் காவியமாவாய் தவறென்பது துடுக்கு சொல்லல்ல கேளம்மா வஞ்சி செலுத்தும் சிறுதுடுப்பு அது நீயம்மா வஞ்சியே உன் தயவில் குடும்பம் ஒரு கோவிலம்மா கெஞ்சிக் கெஞ்சி கால்பிடிப்பது தவறம்மா கெஞ்சுபவரை வஞ்சிப்பதும் பாவமம்மா வீடு மெழுகி வாசல் தெளிக்க விடியும் காலம் போய் சூரியன் சிரிக்க திருமகள் திசைமாறக் காரணம் நீயம்மா கல்வியிலே நீ சிறக்க உன் பெயர் கலைவாணி வீரத்தில் விவேகம் கொண்டால் நீ பத்தினி பொருமையே பெண்ணுக்கு பெருமையென்றே அடிமையில்லை யாருக்கும் ஆணில் நீ சரிபாதி வாயதையடக்கி வணக்கமுடன் செயல்படு மாறும் உலகம் உந்தன் மறுபிறப்பால் நவீன யுகத்திலும் கடந்தகாலம் நினைவில் வை நடக்கும் காலத்தில் பண்பாடு மனதில் பதியவை வளரும் தலைமுறை வளமென வாழ துணை செய் அன்னை என்பவள் என்னவென்பதை புரியச் செய் கட்டியவன் கயவனானாலும் கவனத்துடன் கையாள் உன் கணவனவனென காலம் புகழ நீ வாழ் பெற்றவீடும் புகுந்தவீடும் புகழ்பட வாழச் செய் மற்றவர் இகழும் மனதையும் செயலையும் நினையாதே ஒருகை ஓசை ஒலியது எழுப்பாது இருகை சேர்ந்தால் செவியுள் புகும் ஒலி செல்வமென்பதில் பொன்னும் பொருளும் மட்டுமில்லை கண்ணும் கருத்துமாய் குடும்பம் காப்பதும் அடங்கும் நம்முன்னோர் வழி கடைபிடிக்க கலாச்சாரம் மேலைநாட்டு மகத்துவத்தால் மறந்துவிடாதே நல்லது உண்டு ஏராளம் நம் நாட்டிலே அது காக்கப்பட வேண்டியது உன் செயலிலே இன்னுமுண்டு இனிமையது இனியது வேண்டாம் நேரம் வரும் நிலைமை மாற வளமென நீ வாழ் |
கவிதைகள் >