அடி என்ன பண்ணி தொலைச்சே.... எனக்கே தெரியாமல் என்ன பண்ணி தொலைச்சே... கண்ணின் வழி உள்ளே வந்து கபாலாத்தில் கலந்தே.. என் இதயத்தின் ஓட்டைகளை உன் சுவாசத்தால் அடைச்சே... இரு இதழுக்குள் ஈரப்பசை நிதமும் நீ கொடுத்தே... என் தூக்க கனவை குத்தகைக்கு எடுத்தே.. எனக்கே தெரியாமல் என்ன பண்ணி தொலைச்சே... அடி என்ன பண்ணி தொலைச்சே.... நினைப்புல சிரிக்கிறேன்.. நின்னுகிட்டே நினைக்கிறேன்.. புரியலை.. கொஞ்சம் புரியுது... தெரியுது... மனம் கரையுது... ஆனால். இதெல்லாம் புடிக்கலை என்று பொய் சொல்ல தெரியலை.. மறுபடி கேட்கிறேன்... எனக்கே தெரியாமல் என்ன பண்ணி தொலைச்சே... அடி என்ன பண்ணி தொலைச்சே.... |
கவிதைகள் >