நினைவெல்லாம் நீ

posted Jan 3, 2012, 6:23 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 3, 2012, 6:24 PM ]
அன்று யார் யாரோ என்னை திட்டிய போதெல்லாம் வலிக்கவில்லை _ காரணம் என்னுடன் நீயிருந்தாய் . 
ஆனால் _இன்று நீயே என்னை விட்டு விலகிச் செல்லும் போது ரொம்ப வலிக்கிறது 
நீ என்னை மறந்தாலும் வெறுத்தாலும் 
உன்னை மறக்க நினைப்பதை மறந்து போகிறேன் 
நினைப்பதில் நினைவு தப்பாதிருக்கிறேன் 
என் நினைவிலிருந்து உன்னையோ 
உன் நினைவிலிருந்து என்னையோ என்னால் தள்ள முடியவில்லையடி 
ஏனெனில் 
நீயிருப்பது என் நினைவெனும் சிகரத்தின் உச்சியில் ....*******நான் தப்பு செய்தால் மன்னித்து விடுவது தானே நியாயம் 
என்னை மறப்பதில் உனக்கு நிம்மதியா? 
பரவாயில்லை என்னை மறந்துவிடு*******