விளையாட்டு
டோனி விக்கெட் காப்பில் ஈடுபடக்கூடாது: சங்கக்காரா
![]() இந்திய அணியின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி இனிமேல் விக்கெட் காப்பில் ஈடுபடக்கூடாது என்று இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரரும், முன்னாள் அணித்தலைவருமான குமாரா சங்கக்காரா தெரிவித்துள்ளார். விக்கெட் காப்பாளராக தனது கிரிக்கெட் வாழ்வை தொடங்கிய சங்கக்காரா, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரராக பிரகாசிக்க தொடங்கியதும் விக்கெட் காப்புப் பணியில் ஈடுபடுவதை நிறுத்தினார். தனித்த துடுப்பாட்ட வீரராக விளையாடத் தொடங்கியதன் பின்பு சங்கக்கார அதிகமான ஓட்டங்களைக் குவிக்கத் தொடங்கியதுடன், அவரது சராசரியும் மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. இலங்கை அணி சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், டி20 சர்வதேசப் போட்டிகளிலும் சங்கக்காரா விக்கெட் காப்பில் ஈடுபடுகின்ற போதிலும், டினேஷ் சந்திமாலின் எழுச்சி காரணமாக இனிவரும் விக்கெட் காப்பில் சந்திமால் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், நடைபெற்றுவரும் ஐ.பி.எல். போட்டிகளில் சங்கக்காரா விக்கெட் காப்பில் ஈடுபடுவதில்லை. இந்நிலையில் டோனியின் கிரிக்கெட் வாழ்வும் முக்கியமான கட்டத்தை அடைந்திருப்பதாகத் தெரிவித்த சங்கக்காரா, டெஸ்ட் போட்டிகளில் டோனி விக்கெட் காப்பில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். டோனியின் டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி அவரது உண்மையான திறமையை வெளிப்படுத்துவதில்லை. அவர் அணித்தலைவராகவும், துடுப்பாட்ட வீரராகவும், விக்கெட் காப்பாளராகவும் செயற்படுவதன் காரணமாகவே டோனிக்கு இந்த நிலை காணப்படுகிறது என்றார். மேலும் அவர் கூறுகையில், டோனி மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர். ஆனால், வேலைப்பழு காரணமாக அவரால் முழுத்திறமையையும் வெளிப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்தார். சங்கக்காரா, கிரிக்கெட்டின் பைபிள் என்றழைக்கப்படும் விஸ்டன் சஞ்சிகையின் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. |
ஆசிய கிண்ண கிரிக்கட்: கோஹ்லியின் அதிரடி சதத்தால் இந்தியா அபார வெற்றி
![]() ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கோஹ்லியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐந்தாவது லீக் ஆட்டம் இன்று மிர்புரில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நசிர் ஜாம்ஷெட் 105 ஓட்டங்களும், முகமது ஹபிஸ் 112 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய 28 ஓட்டங்களும், யூனிஸ் கான் 52 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து 330 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கவுதம் கம்பீர் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கர் 52 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய வீராட் கோஹ்லி சதத்தை கடந்து 183 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 47.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 330 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வீராட் கோஹ்லி புதிய சாதனை வீராட் கோஹ்லி 148 பந்துகளில் ஒரு சிக்ஸர், 22 பௌண்டரிகள் உட்பட 183 ஓட்டங்களைப் பெற்றார். ஆசிய கிண்ண போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். 2004 ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ணத் தொடரில் ஹொங்கொங் அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் 144 ஓட்டங்களைப் பெற்றமையே இதுவரை சாதனையாக இருந்தது. இத்தொடரில் நாளை மறுதினம் இலங்கை –பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி எதிர்வரும் 22 ம் திகதி நடைபெறவுள்ளது. 148 பந்துகளில் ஒரு சிக்ஸர், 22 பௌண்டரிகள் உட்பட 183 ஓட்டங்களைப் பெற்றார். ஆசிய கிண்ண போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். |
பிரபு தேவா, சல்மான், ப்ரியங்கா நடனத்துடன் தொடங்குகிறது ஐபிஎல்!
2012-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நடிகர் / இயக்குநர் பிரபு தேவாவின் அட்டகாச நடனத்துடன் ஆரம்பிக்கிறது. ஏப்ரல் 3-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கோலாகலத்துடன் தொடங்குகிறது போட்டி. அன்றைக்கு பிரபலமான தமிழ் மற்றும் இந்திப் பாடல்களுக்கு மேடையில் நடனமாடுகிறார் பிரபுதேவா. அவருடன் பிரபல இந்தி நடிகர்கள் சல்மான்கான், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் கலந்து கொண்டு நடனமாடுகிறார்கள். மிகப் பிரமாண்டமான நிகழ்வாக இதனை ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறவர்... இந்தியின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன். ஏப்ரல் 3-ம் தேதி பிரபு தேவாவுக்கு இன்னொரு விசேஷமான நாள். அன்றுதான் அவரது பிறந்த நாள். இந்த நாளில் இப்படியொரு பிரமாண்ட ஷோவில் அவர் ஆடுவது இதுதான் முதல்முறை! |
பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றி: இந்தியாவின் போராட்டம் வீணானது
![]() ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ணக் கிரிக்கட் போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் நான்காவது போட்டி இன்று மிர்புரில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணி களத்தடுப்பை முதலில் தெரிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கவுதம் கம்பீர் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான முன்னணி நட்சத்திர துடுப்பாட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் பலநாட்களாக தவற விட்ட தனது நூறாவது சதத்தை கடந்து 114 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீராட் கோஹ்லி 66 ஓட்டங்களும், சுரேஷ் ரெய்னா 51 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து, 290 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தமிம் இக்பால் 70 ஓட்டங்களும், நசிமுடின் 5 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஜக்ருல் இஸ்லாம் 53 ஓட்டங்களும், நசிர் ஹுசைன் 54 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் வங்கதேச அணி 49.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 293 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
சச்சினின் சாதனைகள்
![]() உலக கிரிக்கட் ரசிகர்களின் ஆதரவை பெற்ற இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள் அளப்பரியது. 1989: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய அணியில் 16 வயது சிறுவனாக அறிமுகம். 1990: இங்கிலாந்துக்கு எதிராக ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் முதலாவது டெஸ்ட் சதம்(119*). 1993: இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் சதம்(சென்னை, இங்கிலாந்துக்கு எதிராக 165). 1994: தனது 79வது போட்டியில் முதல் ஒருநாள் சதம்(கொழும்புவில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி, சிங்கர் கிண்ணம்). 1996: உலக கிண்ணப் போட்டியில் 2 சதம் உட்பட 523 ஓட்டங்கள். 1997: ஆண்டின் சிறந்த வீரராக விஸ்டன் இதழ் தெரிவு. 1998: சென்னை டெஸ்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 155 ஓட்டங்கள் விளாசல். இந்தியா 179 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி. 2001: ஒருநாள் போட்டி வரலாற்றில் 10,000 ஓட்டங்கள் கடந்து சாதனை. 100 விக்கெட்டும் கைப்பற்றினார். 2002: சர் பிராட்மேனின் 29 சத சாதனையை சமன் செய்தார்(மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 117, போர்ட் ஆப் ஸ்பெயின்). அதே ஆண்டில் பிராட்மேன் சாதனையை முறியடித்தார் (இங்கிலாந்துக்கு எதிராக 193, லீட்ஸ்). 2003: ஐசிசி உலக கிண்ணப் போட்டியில் 673 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை. 2004: கவாஸ்கரின் 34 சத சாதனை சமன். எல்லா டெஸ்ட் அணிக்கு எதிராகவும் சதம் அடித்த 3வது வீரர் என்ற பெருமை(1.கிர்ஸ்டன், 2.ஸ்டீவ் வாஹ்). ஒருநாள் போட்டிகளில் 50 ஆட்ட நாயகன் விருது பெற்ற முதல் வீரர். 2005: தனது 122வது டெஸ்டில் 10,000 ஓட்டங்களை கடந்து சாதனை மைல் கல்லை எட்டினார். 2006: ஒருநாள் போட்டிகளில் 14,000 ஓட்டங்களை கடந்தார் 2007: 400வது சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்பு. 2008: அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முத்தரப்பு தொடரின் போது ஒருநாள் போட்டிகளில் 16,000 ஓட்டங்களை கடந்தார். பிரையன் லாராவின் 11,953 ஓட்டங்களை கடந்து டெஸ்ட் ஓட்டக் குவிப்பில் முதலிடத்துக்கு முன்னேறினார். 2009: ஒருநாள் போட்டிகளில் 17,000 ஓட்டங்களை கடந்து சாதனை. 2010: ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற மகத்தான சாதனை. அதிக டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய வீரராகவும் சாதனை(ஸ்டீவ் வாஹை முந்தினார் 168). 2011: அதிக ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய வீரர் என்ற பெருமை(ஜெயசூரியாவை முந்தினார் 444). 2011: இந்திய அணி 2வது முறையாக உலக கிண்ணத்தை வென்றதில் முக்கிய பங்காற்றினார். இந்திய அணியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக(482) பெருமை. 2012: ஆசிய கிண்ணப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 100வது சர்வதேச சதம் விளாசி உலக சாதனை. |
பாகிஸ்தான் அணி அபார வெற்றி: பரிதாபமான நிலையில் இலங்கை
![]() ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ணக் கிரிக்கட் போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது போட்டி இன்று மிர்புரில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன 12 ஓட்டங்களும், திலகரத்தன டில்சன் 20 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சங்கக்கரா 71 ஓட்டங்களும், உபுல் தரங்கா 57 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகமது ஹபிஸ் 11 ஓட்டங்களும், நசிர் ஜாம்ஷெட் 18 ஓட்டங்களும், எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய யூனிஸ் கானும் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய உமர் அக்மல் அதிரடியாக விளையாடி 77 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் உபுல் தரங்கா பிடியில் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் 72 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரம் இலங்கை அணி இரண்டாவது முறையாக தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. |
இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த இந்திய துடுப்பாட்ட வீரர்கள்: போனஸ் புள்ளியுடன் இந்தியா அமோக வெற்றி
![]() சி.பீ கிண்ண முத்தரப்பு தொடரின் இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சி.பீ கிண்ண முத்தரப்பு தொடரின் இன்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தில்ஷானும், ஜெயவர்தனேவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 12 வது ஓவரின் முடிவில் இலங்கை அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. ஜெயவர்தனே 22 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, ஜடேஜா பந்துவீச்சில் ஷேவாக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மாத்யூஸ் 14 ஓட்டங்களும், சங்ககாரா சதத்தை கடந்து 105 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தில்ஷன் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 160 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து 321 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வீரேந்திர சேவக் 30 ஓட்டங்களும், சச்சின் டெண்டுல்கர் 39 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய காம்பிர் 63 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். வீராத் கோக்லி சிறப்பாக விளையாடி 86 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 133 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பெற செய்தார். இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் சிபீ கிண்ண தொடரில் 11 போட்டிகள் நிறைவடைந்துள்ளதன்படி புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னிலையில் திகழ்வதோடு, இலங்கை மற்றும் இந்திய அணிகள் தலா 15 புள்ளிகளைப் பெற்று முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன. எனினும் ஓட்ட சராசரி விகிதத்தின்படி இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது. இலங்கை அணி 15 +0.162 புள்ளிகளையும் இந்திய அணி 15 -0.593 புள்ளிகளையும் பெற்றுள்ளன. இதன்படி மார்ச் 2ம் திகதி இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் மாத்திரமே இறுதிப் போட்டிக்கு தெரிவாவது உறுதியாகும். |
தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
![]() நியூசிலாந்து-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் ஓருநாள் கிரிக்கட் போட்டி இன்று வெல்லிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராப் நிகோல் 30 ஓட்டங்களும், மார்டின் குப்தில் 7 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய பிராண்டன் மெக்கல்லம் 56 ஓட்டங்களும், வில்லியம்சன் 55 ஓட்டங்களும், மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 253 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின் 254 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி களமிறங்கியது. தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆம்லா 8 ஓட்டங்களும், ஸ்மித் 9 ஓட்டங்களும், கல்லிஸ் 13 ஓட்டங்களும், ஜீன் பால் டுமினி 46 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டி வில்லியர்ஸ் சதத்தை கடந்து 106 ஓட்டங்களுடனும், பிளஸ்ஸிஸ் 66 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் 45.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது. |
சி.பீ கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடர்: இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
சி.பீ கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான இன்றைய(24.02.2012) போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சி.பீ கிண்ண முத்தரப்பு கிரிக்கட் போட்டி தொடரின் இன்றைய போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாடியது. அவுஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மேத்யு வடே 5 ஓட்டங்களும், வார்னர் 7 ஓட்டங்களும் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பீட்டர் பாரஸ்ட் சதத்தை கடந்து 104 ஓட்டங்களும், மைக்கேல் கிளார்க் 72 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 280 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து 281 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தில்சன் 3 ஓட்டங்களும் அடுத்து களமிறங்கிய சங்கக்கரா 22 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அணித்தலைவர் ஜெயவர்த்தனே 85 ஓட்டங்களும், சண்டிமால் 80 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 49.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 283 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
இந்தியா, அவுஸ்திரேலியாவிடம் சுருண்டது
![]() முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் பிரிஸ்பேனில் நடந்த இன்றைய ஆட்டத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் மைக் ஹசி 59 ஓட்டங்களும், பாரஸ்ட் 52 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பதான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 289 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. |