2011 ரக்பி உலக கிண்ணத்தை கைப்பற்றியது

posted Oct 23, 2011, 9:52 AM by Sathiyaraj Kathiramalai
2011 ரக்பி உலக கோப்பையை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை)
இடம்பெற்ற இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை 8-7 என வீழ்த்தியதன் மூலம் 24 வருடங்களுக்கு பிறகு தனது இரண்டாவது உலக கோப்பையை நியுசிலாந்து வென்றுள்ளது. 1999ம் ஆண்டும்2007ம் ஆண்டும் பிரான்ஸ் அணியால் தான் நியூசிலாந்து கோப்பையை வெல்ல முடியாது போனது. தற்போது அதற்கு பழிவாங்கிகொண்டது நியூசிலாந்து. இரு அணிகளுமே தமது பல பெனால்டி முயற்சிகளில் தோல்வி அடைந்த நிலையில் ஆட்டத்தின் முதல் பாதியில் 5-0 என நியூசிலாந்து முன்னிலை வகித்தது. நியூசிலாந்து வீரர் டொனி வூட்கொக் வைத்த மிக வேகமான ட்ரை மூலமே நியூசிலாந்து முன்னிலை பெற்றது.
எனினும் பிரான்ஸ் அணி இந்தளவு நெருக்கடி கொடுக்கும் என நியூசிலாந்து நினைத்தும் பார்த்திருக்கவில்லை. போட்டியின் இரண்டாவது பாதியில் பிரான்ஸ் கேப்டன் தியெரி டுசடுவார் ட்ரை ஒன்றை வைத்தார். திரிங் டுக் சொன் பெனால்டி அடித்தார். இதனால் 8-7 என புள்ளிகள் மாறின.


எனினும் இரு அணிகளதும் பலம்வாய்ந்த களத்தடுப்பினால் போட்டி முடிவடையும் வரை மேலதிக புள்ளிகள் எதுவும் பெறப்படவில்லை. இதனால் 8-7 என நியூசிலாந்து வெற்றி பெற்றது.  போட்டி நாயகனாக தெரிவான பிரான்ஸ் கேப்டன் டுசௌடுவார் 'எமக்கு உண்மையில் ஏமாற்றம் தான். ஆனால்ரக்பி எப்படி விளையாடுவது என எங்களுக்கு தெரியும் என்பதை இப்போட்டியில் காண்பித்தோம் என்றார். இம்முறை உலக கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்றதால் அந்த அணியே கோப்பையை வென்றது அந்நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.