நியூசிலாந்து அணி 26 வருடத்தின் பின் பாரிய வெற்றி

posted Dec 13, 2011, 9:23 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Dec 13, 2011, 9:24 AM ]
அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் ஹோபர்ட் நகரில் நடந்தது இதில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 150, ஆஸ்திரேலியா 136 ஓட்டங்களில் சுருண்டன. அதன்பின் விளையாடிய நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 226  ஓட்டங்கள் எடுத்தது. 241 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது.
இன்றைய ஆட்டத்தில் பிரேஸ்வெல் அபாரமாக பந்து வீசினார். பொன்டிங் 16, கிளார்க் 0, ஹசி 0 ஓட்டங்களில் பிரேஸ்வெல் பந்தில் வெளியேறினர். இறுதியில் 233 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் 7 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. எனவே தொடர் 1-1 என்ற கணக்கில் சமனானது.வார்னர் 123 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெல் 6, சவுதி 2, பவுல்ட், மார்ட்டின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.