அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பனில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 295 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 427 ஓட்டங்களும் எடுத்தன. இன்று(4.12.2011) 4வது நாள் ஆட்டம் நடந்தது. 2வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. ![]() குப்தில் 12, மெக்குலம் 1, பிரேஸ்வெல் 2, வில்லியம்சன் 0, டெய்லர் 0, ரைடர் 36, வெட்டோரி 17, பிரவுன்லீ 41, சவுதி 8, மார்ட்டின் 0 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். முடிவில் நியூசிலாந்து அணி 150 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அவுஸ்திரேலியா தரப்பில் பேட்டின்சன் 5, நாதன் லயன் 3, பீட்டர் சிடில், ஹசி தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 19 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 2.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 19 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. வார்னர் 12, ஹக்ஸ் 7 ஓட்டங்கள் எடுத்தனர். |
விளையாட்டு >